மெரினா கீதம்

"மெரினா கீதம்"

ஒன்றாய் இங்கே கூடிவந்தோம்
ஓராயிரம் தடைகள் தாண்டி வந்தோம்
நன்றாய் ஒற்றுமை சொல்ல வந்தோம்
எம் இனத்தின் கற்பை
காக்க வந்தோம்
அரசியல்மடைமை போக்க வந்தோம்
அறவழி நின்று உரிமை மீட்க வந்தோம்
குருதியில் உணர்வை ஊற்றி வந்தோம்
புழுதியில் புழுவாய் துடித்து நின்றோம்
அண்ணன் தங்கையாய் கூடி நின்றோம்
அண்ணல் காந்தியையும் கடந்து சென்றோம்
"சாதி மதம் இனம்" மறந்து வந்தோம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் துறந்து நின்றோம்
உயர்குரலில் இலக்கை உச்சரித்தோம்
தமிழர் துயர் நீங்க தீயாய் எச்சரித்தோம்
"கடல் கடந்து இன குரல் கேட்டிடவே
கரமுயர்த்தி தமிழ்க்காளையன் பொங்கிட்டான்"
தரணியில் தனித்துவம் தமிழனடா!
இவன் தமிழ்ப்பால் குடித்த காளையடா!!
"மாதம் பத்து சுமந்து ஈன்றெடுத்தாள் தமிழன்னை"
"வருடம் பத்து ஆனாலும் வென்றெடுப்போம் தமிழ்மண்ணை"

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (30-Jan-17, 8:19 pm)
Tanglish : merina keetham
பார்வை : 93

மேலே