வெள்ளிக் கொலுசு

வெள்ளிக் கொலுசு
ஓசையிலே....
துள்ளிக்குதிக்கும்
என்மனசு....
உன்நினைவில்
உருகுதே.....

காலுக்கு கொலுசு
கேட்டாய்.....
எந்தன் ஆயுள்
வரைக்கும்
அது
ஒலிக்குமடி.....உன்
கால்களைக்
கட்டிக்கொண்டு
உருகும் கொலுசு
எனக்குப்
பிடிக்குமே.....

கட்டிவிடச்
சொல்லி.....
கடிந்துகொள்ளும்
கள்ளி.....
நிலைகண்டு
என் காதல்
துள்ளித் துள்ளி
மகிழ்ந்து
போனேனே......

பாதச்
சுவடும்
இல்லை...
கொலுசின்
ஓசையும்
இல்லை.....
அவளின் நினைவு
மட்டும்
நீங்காமல்
என்னை வாட்டிவதைக்குது......!!!

எழுதியவர் : thampu (31-Jan-17, 2:41 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : vellik kolusu
பார்வை : 183

மேலே