உன்னால் முடியும் தோழா

துவண்டு மூலையில் கிடந்த என்னை

தூரத்தில் இருந்து பார்த்தாய் நீயே!

அருகில் காண ஆசை கொண்டு

தேடி தேடி அலைந்தேன் நானே!

வழியில் பலமுறை நான் விழுந்தும்

எழுந்து வருகிறேன் உன்னை நோக்கி!

என்னை காண நீயாக வர வேண்டாம்

நான் உன் அருகில் நெருங்கி வர வர

நீ என்னை விட்டு தொலைவில் செல்வதேனோ!

அதுதான் உனக்கு மகிழ்ச்சி தரும் என்றால்

நானும் தயார், பலரிடம் இகழ்ச்சியடைய!

ஆனால் நம்பிக்கையுடன் போராடுவேன்

உன்னை அடையும் அந்த நொடிவரை!!!

அப்பொழுது உன் பெயரை உரக்க உரைப்பேன்

வெற்றி வெற்றி வெற்றி என்று!!!

எழுதியவர் : பாலகார்த்திக் பாலசுப்பிர (31-Jan-17, 12:04 am)
சேர்த்தது : Balakarthik Balasubramanian
பார்வை : 345

மேலே