பணம் படைத்தவன்
மனிதனை மனிதனாக
மதிக்கும் மனப்பக்குவம்...
அடுத்தவனின் அழுகுரலுக்கு
ஆறுதல் கூறும் நல்பழக்கம்...
உழைப்பால் உயர்ந்து
காட்டும் துடிப்பு
பசித்த உள்ளத்தை
புசிக்க செய்யும் பண்பாடு
பாகுபாடின்றி ஒன்றாக
இணைந்து பழகும் நற்பண்பு
பெண்களை மதிக்கும் பணிவு
உயிருக்கும் மேலாக ஒழுக்கத்தை
போற்றி வாழும் வாழ்க்கை...
இந்த நற்பண்புகள் கொண்டவனே
பணம் படைத்தவன்...
மற்ற பணமெல்லாம் வெறும் காகிதம்
இந்த பண்புகளின் காலடியில்...