என்றும் தனிமை தான்
![](https://eluthu.com/images/loading.gif)
என்றும்
தனிமைதான்.....
இவன்
வாழ்வென்று.....
வாழ்த்திப்போனது
யாரென்று
புரியாமல்
இன்றுவரை
இணையாமல்.....அங்கே
அவள்.....இங்கே
இவன்.....எங்கே
இறைவன்......?????
தூக்கம் தான்
தொலைகிறது.....
ஏக்கம்
தொலையாமல்......!!!!?!?
இன்னொரு
ஜென்ம
வாழ்க்கை எல்லாம்.....
வேண்டாம்
என்று.....இந்த
ஜென்மமே
பாடம்
சொல்லிப் போனதே.....!?
பாசம் வைத்த
கண்களும்.....
கருணை கொண்ட
கைகளும்......
பரிகசித்து
ரசித்துப் போகுது......
ரசனை
என்று......ரணம்
தானே
என்று உணராமல்......!!
தந்தை
முகம் முகம்
கண்டு
தவிக்கும்
குழந்தை.....
ஆண்டு இரண்டு
கடந்து.....
அன்பிற்கு ஏங்கித்
தவிக்குது.....
பாவத்தின் பலனா......?
இல்லை
சனி பாவத்தின்
கிரக பலனா....??
அப்பா என்றழைக்கும்
தருணமெல்லாம்
அப்பாவியாய்
நானும் அவனறியாமல்
அழுது....
துன்பப்பட்டு
தூக்கம் கெட்டு
துன்பத்தில்
சாகிறேன்......!!!