வலி 💔

காலங்கள் கழிந்தாலும்
நம் நினைவுகள் அழியுமா ..
நீ இல்லா என் உலகில் மலர் பூக்களும் உதிருமா ..

கைகோர்த்து சென்ற இடங்களும்
~ புன்னகைத்து பகிர்ந்த நொடிகளும்~ ஆயிரம் ஓசைகள் எழுப்புவதேன்? _ என் உயிரில்லா உதிரத்திடம் !!

உனக்காக நான் இருந்தேன் .. இனி எனக்காக யாரிருப்பார் ~ நமக்கென இருந்த பந்தம் இன்று இடியுற்று மாண்டினதே !!
மலரற்ற காடுகளோ மணமற்று போவது போல்..
நீ மறைந்த என் வாழ்க்கை மதியற்று போயினதே ! 😢

வெறுப்பின் உச்சத்திலோ வேதனையின் பிடியிலோ
காதலற்ற நொடிகளும் இன்று காற்றில்லா கனக்கிறதே!!!

எழுதியவர் : _ கிறுக்கி (31-Jan-17, 2:06 pm)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
பார்வை : 891

மேலே