மண்ணின் அஞ்சறை பெட்டிகள்

காதல் ஒருபோதும்
தூங்குவதே இல்லை
காசினியை நிரப்பி
நாமி தினம் தினம் உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறது
மலர்களின் நிறமாக தென்றலின் குளிராக
மழையின் இனிமையாக
மழலையின் பேச்சாக
ஏன்
நம் கண்ணுக்கு தெரியாத கடவுளின்
அன்புநிறை அரவணைப்பாக
பரவி நிறைந்த காதல்
ஒருபோதும் தூங்குவதில்லை தோழா
கல்லறைகள் சவக்கூடுகளை சுமக்கும்
மண்ணின் அஞ்சறை பெட்டிகள்

எழுதியவர் : கவிஞர் ச ரவிச்சந்திரன் (1-Feb-17, 8:00 am)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 62

மேலே