நீயும் நானும் யாரோ இன்று !!

நீயும் நானும் யாரோ இன்று! 
நினைவில் வாழ கற்றது நன்று! 
மனம் - நேற்றில் காற்றாய் திரியுது சென்று! 
காலம் உன்னையும் என்னையும் பிரித்ததோ என்று!? 

கார்மேகமாய் கோலம் போட்டாய் வந்து 
உன் வதனத்தில் வெண்ணிலவை கண்டேன் அன்று!! 
இதய வாசலின் சாவியை தொலைத்தேன் நின்று 
உன் கள்ளசிரிப்பின் குழியில் மறைந்தாய் - எனை வென்று!! 

சிறுதுளிகளில் - நாம் பிரிந்த நொடிகளை கொன்று 
கைகோர்த்து திரிந்தோமே கனவுலகில் அன்று!! 

மதி - விதியையும் காலம் வென்றதை கண்டு 
மனம் மூங்கிலாய் உடைந்ததே நம் நினைவுகளை கொண்டு 
மூங்கிலினுள் - முகிலாக நம் காதல்  ஒலிக்கட்டுமே என்று! 
மாரிய பயணமே - 
நீயும் நானும் யாரோ இன்று!!... 

_கிறுக்கி

எழுதியவர் : Kanmani Srinivasan (1-Feb-17, 9:48 am)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
பார்வை : 810

மேலே