என்னவளுக்காகக் காத்திருக்கிறேன்

காலைப்பனியில் கட்டுண்டு கதிர்வீசும் கதிரவனை
அவள் நெற்றியில் ஒளிவீசும்
பொட்டுக்கு ஒப்பனையாய் எழுதி
எனது இயல்களில்த் தோற்கடித்தேன்.
சினம்கொண்டானோ என்னவோ?
நண்பகலில் சுட்டெரித்தான்!!!
விடுவேனா நான்?
கனல் கக்கும் கதிர்களை அவள் கயல்
வீசும் பார்வைகளுக்கு ஒப்பாக்கினேன்.
மீண்டும் போட்டியிட துணிவில்லாமல்
மாலையில் காலிலே விழந்துவிட்டான்…
பிழைத்துப் போகட்டும் என்று சொல்லி
அவளுக்கான கவிகளைச் சொல்லி
இரவிலே உறங்கவைத்தேன்…
மீண்டும் வருவான்!!!
நானும் காத்திருக்கிறேன்
கதிரவனைத் தோற்கடிக்க கவிகளைத் தரும்
என்னவளின் வருகைக்காக...