கனவே கலைந்து விடு
காதல் கனவு கலைத்தாயோ
காலமெல்லாம் எனை வெறுத்தாயோ..!
காத்திருக்கிறேன் மீண்டும் ஒருமுறை
உயிரோடு உணர்வை சேர்க்க
உறவை நம் இதயத்தில் கோர்க்க...!
தேடி அலைந்து சேர்த்த காதல்
நிமிடத்தில் கலைத்தாய்...!
கூடி கலந்து சேர்த்த அன்பு
நொடியில் மறந்தாய்...!
வெளியில் திரிந்தாய்...!
உன்னை நினைத்து
வாழ்க்கை நகர்கிறது...!
நம் காதல் இதயம்
மௌனமாய் துடிக்கிறது...!
திரும்பி விடு! விரும்பி விடு!
உணர்ந்து விடு! கலந்து விடு!
உன்னை அறி! உலகத்தை அறி!
உனக்கே விளங்கும் காதல் சுதி!
குழந்தையின் பிஞ்சு விரல் குழந்தையின்
படும் போது எல்லாம்
சட்டென்று திரும்பிகிறது
உன் நினைவு...!
என் ஆயுள் ரேகை
உன் கைகளில்
என் கனவே கலைந்து விடு..!
நட்புடன்
J.K.பாலாஜி.