oru poovin kiral
ஒரு பூவின் குரல்.............
பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு, பெண் பலாத்காரம், வரதட்சிணைகொடுமை, தற்கொலை,
தலைப்பு செய்தி மற்றும் பக்கத்திற்கு பக்கம்.....
பல்வேறு விவாதங்கள் பேச்சளவில் மேடைக்கு மேடை அரங்கேறிக்கொண்டிருக்க ........
ஊருக்கு ஊர் கண்டன ஊர்வலங்கள்........
காட்டாற்று வெள்ளம் போல் காமம் எனும் வக்கிரபேய் பொங்கி தலை விரித்தாடி கொண்டிருக்க.......
யாருக்காக இந்த மகளிர் தின கொண்டாட்டம் மற்றும் வாழ்த்து பரிமாற்றம்...........
பெண் சுதந்திரம் பெயரளவில் பேண்ட் சட்டை போட்டு போர் கோடி தூக்கி கொண்டிருக்கிறது
தினம் தினம் செத்துகொண்டிருக்கும் இந்த பெண்பூக்களின் அரைக்கூவல்கள் கேட்டுமா இந்த கொடுமைகள் தொடர்கின்றன......
நண்பனே ......உன்னை ஈன்றெடுத்த தாய், உடன் பிறந்த சகோதரி உணரும் வலியைத்தானே இந்த ஒரு பாவமறியா உடன்பிறவா ஜீவன்கள் அனுபவிக்கின்றன.........
பின் உயிர் எடுக்கும் விளையாட்டில் ஏன் இந்த பாரபட்சம்........
இந்த காம வெறி களியாட்டம் உன் வீட்டிலும் ஒரு நாள் அரங்கேறும்........அன்றும் நீ அமைதிபடையுடன் ஊர்வலம் செல்வாயா........
பாரதி படைத்த புதுமை பெண்ணே! காளி அவதாரம் பூண்டு சூலாயுதத்தை கையில் எடு!
காமம் எனும் அசுரனை வதம் செய்ய..........
காந்தியின் கனவு மெய்படும் என்ற நம்பிக்கையோடு .........
ஒரு பூ குரல் கொடுக்கிறது................