நாள் காட்டியாய் கரைந்தனவே ---முஹம்மத் ஸர்பான்

ராதை மனதில்
தோன்றிய கனா
பூக்கள் வருடும்
தென்றல் உலா

ராந்தல் போல்
மின்னும் நிழலில்
கூந்தல் பூவாய்
மலரும் பருவம்

தாவணி கட்டும்
நூலாய் மனதில்
ஆசைகள் நூறு
சேமித்த இளமை

கண்கள் பேசும்
பாஷை என்ன
அவனைக் கண்டு
எனை மறந்தேன்

கன்னிக் கவிதை
எழுதும் ஆசையில்
ஆயிரம் பிழைகள்
நான் விடுகின்றேன்

நிலவின் மச்சம்
தாரகை போல
கனவின் மச்சம்
அவளின் புருவம்

சுமந்த தாயை
கட்டியணைத்து
சிறகுகளின்றி
வானில் பறக்கிறேன்

உயிர்த்த தோழி
தோள் சாய்ந்து
புராணங்கள் பல
உளறுகின்றேன்

இரவைத் திருடி
ரணம் செய்தாய்
நரம்பை வருடி
காதல் நெய்தாய்

புன்னகை செய்
மாயனின் மகனே!
பூக்களை கொடு
எந்தன் அன்பனே!

கைரேகை மேல்
ஆயுளின் புத்தகம்
உணர்வின் உயில்
நினைவின் தாரகம்

என் நாட்குறிப்பு
மென் பக்கங்ள்
எங்கும் முழுதாய்
உறைந்தது காதல்!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (5-Feb-17, 9:41 am)
பார்வை : 226

மேலே