மீண்டும் பிறந்து வருவீரோ

வீழ்த்தப்படாத
வீரத்தின் தலைவனே!
ஆண்டாயிரம் கடந்து
நிற்கும்
அந்நியவனுங்கண்டு
வியக்கும்
அழகுமிகு உம் கட்டிட
கலையழகு
நுணுக்கத்தோடு
தோற்றே போகின்றது
இக்கால என்
தொழில்நுட்பம்...
ராஜ ராஜ சோழனே!
மீண்டும் பிறந்து
வருவாயோ
உம் கலைநயத்தின்
ரகசியம் சொல்ல....


தன்மனதை வதைத்த
தீண்டாமையிங்கே
வேண்டாமென்று
சமத்துவமிங்கே
உண்டாக
இன்னல்பலவுங்கடந்து
நீரியற்றிய அரசியல்சட்டம்
இன்று
உறுதுணையாகிப்போனதே
ஊழலுக்கும்
லஞ்சத்திற்கும்...
அண்ணல்
அம்பேத்கரே!
மீண்டும் பிறந்து
வருவீரோ
புதிய சட்டமியக்க....


சாதியும் மதுவும்
வீழ
மூடத்தனம் முற்றும்
அகல
எழுச்சி கொண்டு
புரட்சி பல கண்டு
மலர்ந்திடும்
மாற்றம் பல
செய்திட்டாயே!!
இருந்துமென்ன பயன்
இங்கே?
மலந்தின்னி மனிதர்களின்
சாதிவெறிக்
கொடூறக்கொலைகளோ
வீரியம்பெற்றே
போகிறதே...
பகுத்தறிவு பகலவனே!
தந்தை பெரியாரே!
மீண்டும் பிறந்து
வருவீரோ
உம் தலைமையில்
போராட்டம்
பலவும் நடத்திட..


கருணையின் வடிவாய்
நின்று
அன்பால் யாவரையும்
வென்று
எளியோர் ஏழையை
உடன்பிறப்பாய்
எண்ணி
தொழுநோயாளிகளையுந்தொட்டு
அரவணைத்தாயே...!
அவர்கள்தொழும்
கடவுளாய் ஆனாயே..
இன்றோ மனிதயினம்
பூனையைக்
கொஞ்சுதம்மா
நாயை
அணைக்குதம்மா
ஏனோ சகமனிதர்களை
கருணையாலணைக்கத்
தயங்குதம்மா...
சேவைத்தாயே!
அன்னை தெரேசாவே!
மீண்டும் பிறந்து
வருவாயோ
நோயுற்று வாழும்
உம் பிள்ளைகளை
அரவணைக்க....


கடுந்தவத்தால்
பாரதத்தாய்
வயிற்றுதித்தாய்
வள்ளுவனின் குறள்வழி
நின்றாய்
நாட்டின் விஞ்ஞான
முதுகெலும்பை
நிமிர்த்தினாய்
தமிழின் வீரத்தையும்
தமிழன் ஆற்றலையும்
உலகறியச் செய்தாய்
பலகோடி இளைஞர்கள்தம்
மனதில் கனைவை
விதைத்து
இந்தியாவை
பாதிவல்லரசாய்
விட்டுச்சென்றாயே..
ஏவுகணை நாயகனே!
எம்மிதயமாய்த்
துடிக்கும் கலாமே!
மீண்டும் பிறந்து
வருவாயோ
இந்நாட்டை முழு
வல்லரசாக்க...

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (6-Feb-17, 12:26 am)
பார்வை : 92

மேலே