காலத்தின் கட்டளை
இமாலயத்தின் பனிமுகடுகள்
இருக்குமா ? தெரியவில்லை
இருநூறு ஆண்டுகளில்
நகரத்தின் இதயத்தை
கடலின் கால்கள்
நனைத்து கொண்டிருக்கலாம்
இருநூறு ஆண்டுகளில்!
எல்.பி.ஜி-களும்…..
எங்கே போனதென
ஆராய்ச்சிகளும் செய்யலாம்
இருநூறு ஆண்டுகளில் !
நகரத்தின் வெளிச்சத்தில்
சூரியனே சற்றே திகைத்து
கண்மூடிக் கொள்ளலாம்
இருநூறு ஆண்டுகளில்
நிச்சயமாய் இருக்கும்
நம்மையே கட்டுக்குள்
வைக்க
கையடக்க பொறிகள் !
அவை ஐம்பொறி
மனிதனை
அல்லோகலபடுத்தலாம்
அப்போது…..அவனது
அலறல் கூட
கேட்காது இயற்கைக்கு !
கவிஞர் கே. அசோகன்.