தோழன்

சிநேகிதம், நட்பு அதிலும் ஆண்நட்பு,
அதை புரிய வைத்த அன்புத்தோழன் நீ!

உன் பயணங்களை தவிர்த்து, எனக்காக இல்வாழ்க்கையில் என்னோடு பயனித்தாய்.

இடையில் இருந்த பள்ளங்களில் தவறி விழாமல் கைக்கொடுத்தாய்!

நட்பு தினத்தையும், நண்பர்கள் தினத்தையும் நாம் கொண்டாடியது இல்லை.

நாம் சந்தித்த தினங்களையே கொண்டாடினோம்,
நண்பர்கள் தினமாக!

இனிமேல் எப்பொழுதும் திருக்குறள் போல் வாழ்வோம்.

மேலடி நீயாக,

கீழடி நானாக,

அந்த நட்பதிகாரத்தில்!

எழுதியவர் : இஸ்மாயில் (6-Feb-17, 12:14 pm)
சேர்த்தது : அகரன்
Tanglish : thozhan
பார்வை : 508

மேலே