ஓர் இரவு
நாகரிகம் வளராத நேரம் மனிதனை மதித்த காலம்
அன்று இரவு! நடுங்கும் குளிர்! மார்கழி மாத குளிர் போன்று இருந்தது..... மாலை அவன் தோழருடன் பேசும் போது ஒருவன் சொன்னான் அவன் இருக்கும் நகரம் இன்றோடு அழிந்துவிடும் என்று அது உண்மை போல் அவன் பேசியதால் இவனுக்கு மனதில் பயம் எழுந்தது. தூக்கமும் வரவில்லை, அவன் வேலை தேடி ஊரை விட்டு நகருக்கு வந்து ஓர் இரு வாரம்தான் ஆகியது. உறவினர்களை பிரிந்து இங்கு வந்து தன் உயிர் போக போவதை எண்ணி பயந்தவனாய் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். ஒரு சமயத்தில் சமாதானம் ஆகி ஊரை பற்றி என்ன தொடங்கினான், அவன் சிறு வயதில் செய்த குறும்பு தனத்தை, அவனின் மாமன் பெண் மேல் அவன் வைத்த பாசம், அவன் குடும்பம் அவள் மீது கொண்ட அன்பு, இப்படி சென்றது அவன் நினைவு ஊரை நோக்கி,,,,,,,,,,,,,
அவன் ஊர் நகரில் இருந்து 300 கி.மி தூரத்தில் உள்ளது, பசுமை நிறைந்த கிராமம் அது, அங்கு இருப்பவர்களுக்கு அங்கு இருந்து பிரிய மனம் இல்லா ஒரு அழகிய வனம். அதில் அவன் வீடு வனங்களுக்கு நடுவில் இருக்கும். அவன் மாமன் வீடு அடுத்த தெருவில், ஆரம்பத்தில் அவளின் மேல் இவனுக்கு அன்பு இல்லை என்றாலும் நாட்கள் செல்ல அவனை அறியாமல் பாசம் வைக்க தொடங்கினான். அந்த கிராமத்தில் காவல், விசாரணை எல்லாமே அவர்களுக்குள்ளே! அவனின் அப்பாவை கண்டு அனைவரும் பயப்படுவர், அவர் ஒரு வார்த்தை சொன்னால் அனைவரும் கட்டுப்படுவர். அவனும் அப்பாவிற்கு மறு பேச்சி பேசுவதில்லை.
ஒரு நாள் அவன் சக நண்பன் ஒருவனை விளையாட்டாக ஒரு நடிகையின் பெயருடன் இணைத்து பேசினான், அந்த நடிகையை அவன்அ நண்பனுக்கு பிடிக்கும் என்பதால் அவனை கிண்டல் செய்து அழைப்பான். அந்த பெயரில் ஊரில் பெண் ஒருத்தி இருந்தால் என்பது தெரியாமல் தோழன் வரும்போது அவனை அந்த நடிகையின் பெயரை அழைத்து கிண்டல் செய்வான், அந்த வேலை அந்த பெண்ணும் அவள் உறவும் அவ்வழி வர இவளை வைத்து கிண்டல் பண்ணுகிறார்கள் என்று தவறுதலாக நினைத்து, அந்த பெண்ணின் உறவினர்கள் கோபம் கொண்டு இவன் தோழனை விசாரித்தனர், அவன் நடந்ததை கூறியும், அவர்கள் நம்ப மறுத்து அதை பெரிய விவகாரம் ஆக்கினார், இதனால் அந்த ஊர் பெரியவர்கள் அவன் நண்பனை அந்த ஊரை விட்டு 4 வருடம் வெளியேற தீர்ப்பு வழங்கினார். இவன் கூறியும் அவர்கள் ஏற்க மறுத்தனர். இந்த விஷயம் அவனை வெகுவாக பாதித்தது, அவன் நண்பனை அதன் பின் அவன் பார்க்கவில்லை, வருடம் 4 ஆக இன்னும் இரு மாதமே மீதம் இருந்தது. இப்போது அதை நினைத்து வருத்தப்பட்டான். அந்த சம்பவம் பிறகு அவன் கிண்டல் செய்வதை நிறுத்தினான். ஒருவேளை நகரம் அழியவில்லை எனில் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தான்.
அதன் பின் அவன் மாமன் மகள் அவளுக்கு ஆறுதல் சொல்ல தொடங்கினாள். இவர்கள் இருவரும் நல்ல தோழமையுடன் பழகினார், இருந்தும் அவன் குற்ற உணர்வு அவனை உறுத்தியது. அவன் தோழனை நினைத்து வருந்துவான். அவள் இவனை சமாதானம் செய்வாள். இப்படியே நாட்கள் நகர்ந்தது. அவர்களுக்குள் பாசமும் அதிகரித்தது, இதனால் அவனை மாப்பிள்ளை ஆக்க அவளின் தந்தை விரும்பினார். அவளிடம் சம்மதம் கேட்டு இவனின் வீட்டிற்கு சம்மதம் பேச சென்றனர், அவன் அப்பாவும் சம்மதம் தெரிவித்தார், ஆனால் இவனுக்குள் அவள் மீது காதல் இருந்தது இல்லை. நட்பு மட்டுமே இருந்ததாக இவன் நம்பினான். மாமன் மகளின் அன்பிற்கு இவன் தகுதியானவனா? என்று தனக்குள் கேட்டு கொண்டான். அவளை இவன் ஒரு காலத்தில் கிண்டல் செய்து அவளை புண்படுத்தியது எண்ணி தலை குனிந்தான். அவளுக்கு தான் தகுதியில்லை என்று நினைத்து ஊரை விட்டு வந்து விட்டான். ஆனால் இங்கு வந்த பிறகு அவளை நினைக்காத நேரமில்லை, அப்போதுதான் உணர்ந்தான் அவனுக்குள்ளும் காதல் இருந்தது என்று, அவளை இந்த கணம் பார்க்க நினைத்தான். தான் ஊரிலேயே இருந்து இருக்கலாம் என்று வருந்துனான். அவளை பிரிந்ததால் தான் இப்படி நடக்கிறது என்று நொந்துகொண்டான். நாளை நகரம் அழியவில்லை எனில் அவளை பார்க்க வேண்டும் என்று நினைத்து கடவுளை வேண்டினான். அவன் காயப்படுத்திய அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்பினான். தொலைபேசி இல்லா காலம் என்பதால் அவர்களை பார்க்க விரும்பினான்... அனைவர்க்கும் நன்றி சொன்னான் மனதினுள்..... தான் அனைவர்க்கும் பாரமாய் இருந்ததை எண்ணி வெட்கப்படான் நேரம் கடந்ததால் தூக்கம் வரவே தூங்கினான். விடியல் இல்லை என்று தன்னுள்
மறுநாள் விடிந்தது அவன் நண்பர்கள் அவன் முன் நின்று, வணக்கம் என்றதும் திடுக்கிட்டு எழுந்தான், நகரம் அழிய வில்லையா என்று கேட்டதும் அவன் நண்பர்கள் முட்டாள் தின வாழ்த்தை சொன்னதும் தான் கிண்டல் செய்ய பட்டோம் என்று நினைத்து மகிழ்ந்து ஊருக்கு விரைந்தான்........
-மூ.முத்துச்செல்வி