உன் நினைவாலே

உன் நினைவாலே ...
என் எண்ணமெல்லாம் சிதறுதடா.. இதயமெல்லாம்
பதறுதடா..
உன் இதயத்தில்
என்னை சிறை வைத்திருந்ததற்கு பதிலாக..
உன் கையாலே
மரணதண்டனை கொடுத்திருக்கலாம் எனக்கு...
என் கைகடிகார முள்ளை நிறுத்திவிட்டேன்...
நாட்காட்டி தேதி தாள் கூட கிழிக்கவில்லை...
ஏன் தெரியுமா?!..
நீ வேண்டாம் என்று உதறிச் சென்ற நாட்களிலே நான் இன்னும் உறைந்து நிற்கிறேன் மனத்திற்குள்ளே...
பூத்த மலர் அரும்பாகாது..
அரும்பிய காதல் மனதில் என்றும் உதிராது...
இதயம் இல்லாமல்
உயிர் வாழ்கிறேன்..
உன் நினைவுகளை சுமக்கிறேன்..
சுமையாக
அல்ல..
சுகமாக...
என்றும் உன் நினைவுகளோடு...
வாழ்ந்து கொண்டே...
மனதோடு சாகிறேனடா...