மன அழுக்கை அகற்றும் வழி
உடல் மேல் சேர்ந்த அழுக்கையெல்லாம் அகற்றுவதற்காக பல செயற்கை பொருட்களையும், நறுமணம் கமழும் வாசனைப் பொருட்களையும் பூசிவிட்டு, நீரால் கழுவி நாம் உடலால் சுத்தமாக இருப்பதாக நினைக்கிறோமே....
உண்மையில் நாம் சுத்தமாகத் தான் இருக்கிறோமா??...
உடல் மேல் சேரும் அழுக்கையெல்லாம் அகற்ற அகற்ற மீண்டும் மீண்டும் சேர்கிறதே மானிடா....
உடலே இவ்வாறென்றால் மனதில் சேரும் அழுக்கையெல்லாம் அகற்றவும், மீண்டும் அழுக்கு சேரவிடாமல் தடுக்கவும் வழியறிவாயோ மானிடா????...
நானறிந்ததைச் சொல்கிறேன், கேளாயோ?????...
உடல் அழுக்கையெல்லாம் அகற்ற பல உபயங்களிருக்கலாமே...
மன அழுக்கையெல்லாம் அகற்ற ஒரே ஒரு உபயமே உண்டு....
அது யாதெனில் சகலமும் அவனே என்றுணர்ந்து, அவன்பால் அன்பு மேலோங்க மனதை அவனிலேயே லயித்திருக்கச் செய்தலே.....
மறுப்போரின் மனதிலும் மாற்றுருவில் அவனே வீற்றிருக்கிறானே....
அவன் இவ்வாறிருப்பானென்று குறிப்பிட, ஒரு குறிப்பிட்ட உருவமாய் அவனில்லை....
யாவும் அவனாய் உள்ளான்.....
அழுக்கால் நிறைந்த மனதால் அவனை மிகச் சரியாக உணர இயலாதே...
அவனை உணர்ந்தோராலும் வார்த்தைகளால் சரியாக எடுத்துரைக்க இயலாதே....
தோற்றமும் அவனிலிருந்தே...
முடிவும் அவனை சேருவதே....