தலைமைச்செயலகம் - முதல் நாள்

#கோட்டையில்_முதல்_நாள்...
"அடேங்கப்பா, எம்மாம்பெரிய தார்சு வீடு!"
"மேடம், இதுதான் உங்க ஆபீஸ்!"
"தெரியும்யா! ஒரு பீலிங்ல சொல்லிட்டேன்!"
அலுவலகத்தில்.....
"எதுக்கு இந்த பழைய புஸ்தகத்தை எடைக்கு போடாம வச்சிருக்கிங்க?"
"மேடம் இதெல்லாம் கோப்புகள்! இதுல நீங்க சைன் பண்ணுனா தான் தமிழ் நாடே செயல் படும்!"
"ரொம்ப புழுவாத, கொடநாடுல அக்கா இருக்கும் போது தமிழ்நாடு VCR கேசட் மாதிரி சிக்கிக்கிட்டா இருந்துச்சு? யாரு இது காக்கி டிரஸ்ல? கூர்க்கா வா?
"மேடம், இவரு தான் கமிஷனர்?"
"கமிஷசன் வாங்க தான் எங்க சொந்தகாரங்க இருக்காங்களே. அப்புறம் எதுக்கு ஒருத்தர தனியா வேலைக்கு வச்சு வெட்டி சம்பளம்?"
"மேடம், இவரு போலீஸ் கமிஷனர்!"
"அப்படி புரியுற மாதிரி சொல்லுயா இடியட்!"
"சாரி மேடம்!"
"ஆல் ரைட், ஜன்னல் ல இருக்குற அந்த ஓயிட் ஸ் கிரீன் ன மாத்த சொல்லு. கண்ணு கூசுது!"
"மேடம், அவங்க எல்லாரும் மினிஸ்டர்!"
"ஓ அப்படியா? அசையாம இருக்குறதால கண்பியூஸ் ஆயிட்டேன்! இது எல்லாத்தையும் அப்படியே ஈவினிங் வரைக்கும் அங்கேயே நிக்க வைங்க. இந்த டிசைன் நல்லாருக்கு!"
"மேடம், கைல என்ன டிபன் கேரியர்? சாப்பாடு நேரத்துக்கு வந்துரும்!"
"நான்சென்ஸ் இது என்னோட மேக் அப் செட்!"
"சாரி, மேடம், உங்க முதல் கையெழுத்து எதுன்னு எல்லாரும் ஆவலா இருக்காங்க!"
"அவசரப்படாத, மொதல்ல கையெழுத்து போட்டு பழகிக்கிறேன்!"
"ஆகட்டும் மேடம்!"

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (8-Feb-17, 8:19 am)
பார்வை : 321

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே