முன் தோன்றிய மூத்தக்குடி

முன்தோன்றிய மூத்தக்குடி....

உயிர் கோளத்தின் ஆதிவாசி
உரிமை கொண்டாடும் சுதந்திரதேசி
துருவங்களை தவிர்த்திடும் பரதேசி
துர்வாடையில் திணறிடும் நம்நாசி

அடமாய் ஆக்கிரமிக்கும் விருந்தாளி
அறுபட்டாலும்தலை வாழும் ஜீவராசி
அணுக்கதிரை தாங்கிடும் அபூர்வத்தகவி
அர்த்தசாமத்தில் உலவிடும் அண்டவைரி

பெரிப்பிளனேட்டா அமெரிக்கெனா எனும் பெயரி
புழக்கத்தில் அனைத்துண்ணி ஒட்டுண்ணி
ஒவ்வாமை ஆஸ்துமா உண்டாக்கும் காரணி
ஒல்லையில் மரபணு மாற்றும் தாரணி

ஹீமோகுளோபின் அற்ற வெள்ளைக் குருதி
ஹீரோசிமாவில் பிழைத்த அதிசயப் பிறவி
ஜெர்மனியில் பிறந்தது இதன் பூர்வீகக்குடி
ஜென்மங்கள்பல தாண்டியும் மாறாத உயிரி

பாலினம்பெறுக்க வளர் வம்சம்
புரதம் செழித்த உடலம்சம்
மாதம் முழுதும் உபவாசம்
ஸ்பைரக்கல் துளைவழி சுவாசம்

கடுகளவு மூளை பெரும் சஞ்சீவி
நோய்தீரக்கத் தரும் எதிர்உயிரி
பரிணாம வளர்ச்சியற்ற ஆறுகால் பூச்சி
பார்த்தவுடன் நாம் அருவருக்கும் கரப்பான்பூச்சி!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (8-Feb-17, 7:44 pm)
பார்வை : 52

மேலே