!!!காதலுக்காக!!!

*** நீ
மரத்தடியில்
நிற்கிறாய்
நான்
மரமேறி
உலுக்குகிறேன்!
உனக்காக
உதிர்கிறோம்
என்ற
சந்தோசத்தில் பூக்கள்...!!!

*** நம்மை
கண்ட பிறகுதான்
இந்த
இரவுகள்கூட
வெட்கப்பட
கற்று கொண்டன...!!!

*** நாம்
மென்மையாய்
பார்த்துகொள்ளும்பொழுது
நம்
காதல்
கர்ப்பகிரகம்
பூ
பூத்துவிடுகிறது...!!!

*** அடகுகடையில்
வைத்திருந்தாள்
மீட்டு இருக்கலாம்
ஆனால் அது
ஒரு
அழகி
கடையில் அல்லவா
அடமானமாகி விட்டது
''மனசு''...!!!

*** உன்னை
கவிதை மழையில்
நணைப்பதா?
முத்த மழையில்
நணைப்பதா? என்று
யோசித்து கொண்டு
இருக்கும்பொழுது
அந்த
பாழாய்ப்போன
மழை வந்து
நணைத்துவிட்டதே...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (10-Jul-11, 2:32 pm)
பார்வை : 549

மேலே