வசந்தம் பாடும் பறவையிது

வாழ்க்கை என்னும் சோலையிலே
வரமாய் மலர்ந்த கவிதையிது !
வாழ்நாள் முழுதும் பிரியமுடன்
வசந்தம் பாடும் பறவையிது !

அழகில் முல்லைப் பூவாக
அமுதம் சிந்தும் மழையாக
அணைப்பில் தாயின் இதமாக
அசர வைக்கும் அதிசயமே !

குழந்தை இருக்கும் வீட்டினிலே
குறைகள் கூட மறைந்துவிடும்
குற்ற மில்லாக் குணத்தால்
கொஞ்சும் குழந்தை இறைவடிவே !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Feb-17, 8:22 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 209

மேலே