ஏழையின் வேண்டுதல் - 4

கட்சிகளில்லா ஆட்சி வேண்டும்...
நல்ல மனங்களின் ஒற்றுமையால் நல்லாட்சி மலர வேண்டும்...
பணத்தின் அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும்...
ரவுடித்தனமில்லா நல்லதொரு சமுதாயம் அமைய வேண்டும்...

தீமை அழிக்கப்பட்டு நன்மை ஏற்கப்பட வேண்டும்...
மனநோய் இல்லாதொழிய வேண்டும்...
காண்பதெல்லாம் ருசிக்கவெண்ணாத மனம் வேண்டும்...
ஆடம்பரமில்லாது அழிக்கப்பட வேண்டும்...

உடுக்கும் உடையால் உள்ளத்தைத் தீர்மானிக்கப்படாமை வேண்டும்...
உயிர்களின் முன்னேற்றம் காணும் தொழிற்நுட்பங்கள் வேண்டும்...
அழிவிற்கு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும்...

உள்ளத்தின் உண்மைத்தன்மை வெளிப்பட வேண்டும்...
பிறரைக் கெடுப்போர் கெட்டொழிய வேண்டும்...
தூய அன்பிற்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்...
கண்ணியமான காதல் காப்பாற்றப்பட வேண்டும்....

வெறித்தனங்கள் வேரறுக்கப்பட வேண்டும்...
மதங்கள் அன்போடு மனிதர்களாய் வாழவே வழிகாட்ட வேண்டும்...
மனித நேயம் வளர்க்கப்பட வேண்டும்...
மனித உரிமைகள் வழங்கப்பட வேண்டும்....

அடிமைத்தனங்கள் இல்லாதொழிய வேண்டும்...
பசி, பட்டினியால் யாரும் சாகாத நிலை ஏற்பட வேண்டும்...
ஆண், பெண் சமத்துவம் வேண்டும்...
அனைவரும் ஒன்றாக கருணையோடு வாழ வேண்டும்.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Feb-17, 4:48 pm)
பார்வை : 323

மேலே