தொடாமல் போகும் நிழல்கள் - மரபு கவிதை

Dr.ஜீவாவின் கவிதைப்பூங்கா கவிதைப்போட்டி எண் 6

கவிதை வகை :- மரபு கவிதை ( தரவு கொச்சகக் கலிப்பா )


தலைப்பு :- தொடாமல் போகும் நிழல்கள்


படைப்பு :- சொந்த படைப்பு .

ஆக்கம் :- திருமதி . சரஸ்வதி பாஸ்கரன்

முகவரி :- 50 , சேதுராமன் பிள்ளை காலனி
டிவிஎஸ் . டோல்கேட் ,
திருச்சி - 20
அலைபேசி :- 9443206012


தொடாமலுமே போகின்றன
----- தொடர்கின்ற நிழல்களுமே !
விடாமலுமே துரத்துகின்ற
------ விலகாத துன்பம்போல்
படாமலுமே படர்கின்றன
------ படுத்தபின் முடிகின்றன .
தடாசட்டம் போட்டாலும்
------ தடுக்கவுமே முடிவதில்லை .!!



நிழலாகப் பின்தொடரும்
------ நிசமான உறவுகளே !
அழகான எழிலுருவம்
----- அழகியதோர் பிம்பங்கள் !
பழகாத மக்கள்போல்
------ பழகிடவே ஆசைகொள்ளும் !
தழலிடையே பட்டாலும்
------ தான்கருகி உயிர்கொடுக்கும் !!!


மனிதர்கள் கழிவுகளை
------ மனிதநேயம் கொண்டவர்கள்
புனிதமான செயலென்றே
------ புத்தாக்கம் செய்கின்றார் !
இனியாவும் கலிகாலம் !
------ இன்பமுண்டோ வாழ்வினிலே !
தனிமனிதன் தவிக்கின்றான்.
------- தனிமையிலே நிழலுருவம் !!!


முகம்சுழிக்கும் மக்களினம்
------- முழுதாக மாறவேண்டும்.
அகம்முழுதும் சாக்கடைகள்
------- அழுக்கான மனப்போக்கு .
தகமையிது தக்கதுவோ
------ தவறான தொடுகைகள் .
மகவினது கழிவுதனை
------ மாற்றுகின்றத் தாயுள்ளம் !!!


கள்ளமிலா உள்ளத்திலே
------ கணமேனும் துன்பமில்லை .
பள்ளமில்லா வாழ்க்கையிலே
------ பனித்துளியாய் போகின்ற
வெள்ளம்போல் நிழல்களுமே
------ வேடிக்கைக் காட்டிடுமே !
துள்ளுகின்ற பருவத்தும்
------- துணைவேண்டும் தொடாமலே !!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Feb-17, 7:51 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 98

மேலே