பறிபோகுதடா நம் உரிமைகள் 555
மக்கள்...
அடிமைகளுக்காகவே சிம்மாசனங்களை
சுமந்துகொண்டு...
நிழல்போல் செல்கிறது சில
மனித பணப்பேய்கள்...
பகலின் வெப்ப கதிர்களை
இரவுக்கு நெய்யும் போர்வை...
ரூபாய்க்கு விற்றோம்
நாம் ஒட்டு...
பொத்திகிட்டு போ
என்கிறான் வெற்றிபெற்று...
மண்ணில் விழும் ஒவ்வொரு
மழைதுளியும்...
போராட்டத்தை சந்திக்கும்
வினோதம் இன்று...
பத்து வயது சிறுவனும்
கண்டான் அவன் மேனியில்...
பல காயங்களின்
தழும்புகளை கடற்கரையில்...
ஆறுமாத மழலையும்
தாங்கியது கடும்குளிரை...
தாய் மண்ணின்
உரிமைமீட்க...
காவலுக்கு வந்த காக்கி சட்டையும்
கருக வைத்தது குடிசைகளை...
தகர கொட்டகைகள்கூட
இன்று அரசியல் வாடை வீசுது...
கடலில் மிதக்குது என்னை படலம்
கரைசேர்க்க முடியாத அவலம்...
ரூபாய்க்கு விற்கும்
நம் ஒட்டு...
பறிபோகுது நம்
உரிமை இன்று...