நிழலும் பொசுக்கும் நினை - ஒரு விகற்ப இன்னிசை வெண்பாக்கள்
தீண்டும் விரல்கள் திகைக்கும் மழலைகள்
வேண்டுமோ இஃதுமே வேதனை நெஞ்சத்தில்
மாண்புடை மானிடனா மண்ணில் பிறந்தவனா
ஆண்டவனும் தீக்குள் அகல் .
அகன்றிடு மாதர் அகத்தையும் நோக்க
மகத்துவம் மண்ணில் மகளிர் உணர்வாய் .
சகத்தையும் வென்றிடு சந்ததிக்கு நன்றாம்
சுகத்தையும் தந்திடு சூழ்ந்து .
மழலையர் வன்கொடுமை மாந்தர்க்கு நன்றோ
தழலிடை வைத்துத் தளிர்களைக் கொல்லல்
அழகுடை செய்கையோ அற்பரே உங்கள்
நிழலும் பொசுக்கும் நினை .