ஏழையின் வேண்டுதல் - 3

நீதியை வழங்க நிதிகேட்கும் உலகில் ஏழையானவனிவன் எங்கு செல்வேனோ?....

கொவிலுக்கு வந்து வணங்காததாலோ, இறைவன் நம்மைச் சோதிக்கிறானென்றெண்ணி, கோவிலுக்கு சென்றால் அங்கு கல்லாய் வீற்றிருக்கும் இறைவனோ காசு வாங்கிக் கொண்டே தரிசனம் தருவேனென தனது அடியாள்களால் தடுத்து நிறுத்தினான்....

என்னிடம் கொடுக்கக் காசு இல்லையென்று கூறியதும் என் பின் பிடரி பற்றி வெளியே தள்ள எத்தனிக்கும் நேரம்,
" முருகா ", என்றே வாயிலிருந்து வார்த்தை பிறக்க எங்கிருந்து வந்ததோ அவ்வளவு வீரம்!!...
அவர்களாலென்னை கடுகளவும் அசைக்க முடியவில்லை....

சட்டென திரும்பினேன்..
முகத்தில் கோபத்தின் அறிகுறி உச்சமாய் இருக்க, வழியைத் தடுத்து நின்ற அடியாள்களெல்லாம் விலகிச் செல்லக் கல்லாய் இருந்த இறைவனிடம் சென்றேன்...
தங்கத்தால், ஆடம்பரத்தால் பளபளவென காட்சியளித்தானவன்....

சகலத்தையும் படைத்தவனுன்னைக் காண இந்த அற்பர்கள் காசு கேட்கிறார்களே,
உண்மையில் நீ இங்குதான் குடியிருக்கிறாயோ???....
நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் உனையே வணங்கி வாழும் நான் உன் பக்தனல்லவோ????....
என்னை கோவிலுக்குக் காசு தராமல் வர கூடாதென்று கூறும் அளவிற்கு நீ தங்க ஆபரணத்தில், ஆடம்பரத்தில் மூழ்கிப் போனாயோ??????....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Feb-17, 3:06 pm)
பார்வை : 1168

மேலே