காதலித்து பார்

ஒரு உயிரில் கரைந்திட்ட
இரு துருவங்கள் நீயும் நானும்!
காதல் நம்மை கட்டி போட்டாலும்
காமம் வீசியதில்லை நம் பார்வையில்
அங்கொன்றும், இங்கொன்றும் காதல் தோல்வி
காதில் கேட்டிட நம்பிக்கை வளர்த்தோம்
நம் வரைமுறை தெரிந்த காதலில்.
உன் முகம் காண வீதியெங்கும் வீசிய பார்வை
அந்த தெருவும் அழகாய் தெரிந்தது எனக்கு
உன் பார்வை தினம் படுவதாலோ என்ற
எண்ணமும் வந்து செல்ல மறப்பதில்லை
காதலின் நினைவுகள் அவை
அசைபோட தவறியதுமில்லை
என் நாட்கள் அழகாக மாறிப்போனது
காதலியே! உன் காதலை சுமந்து செல்வதால்
மாதம் பல உருண்டு வருடங்கள் ஆனபோதும்
மாறவில்லை நாம் கொண்ட காதல்.
பூவிலும் மென்மையானது நம் காதல்
காலம் கனிய வைக்கும் என்ற நம்பிக்கையில்......

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (12-Feb-17, 2:04 pm)
Tanglish : kadhalitthu paar
பார்வை : 735

மேலே