என் தோழன்

அழகான நாளது
கதிரவன் கறைந்துவிட சற்று நேரம் தான் இருந்தது
கண்ணெதிரே பார்த்ததில்லை
கற்பனையில் கூட நினைத்ததில்லை
எனக்கென ஒருவன் எழுவானென்று

உன்னுடன் நான் அறிமுகமானேன்
உன் மழலை போன்ற சிரிப்பில் மயங்கி போனேன்

இன்று நினைத்தாலும் அந்த நொடி
ஒரு பிம்பம் போல் தெரிகிறது
கில்லி பார்க்கிறேன்
அய்யோ!!!!
வலிக்கிறது
உடலிள்ள ,என் உள்ளத்தில்

கடந்த காலமோ என்னை கடந்து செல்ல
பாதையின்றி தவிக்கிறது

உன்னை சந்தித்த நேரம்
மழை துளி,என் மேல் விழுந்தது
என் மனம் சில்லென்று சிறகடித்து பறந்தது

அன்று வந்த மழை காலத்தின் சூழ்ச்சியென்று எண்ணி இருந்தேன்
ஆனால் மேகமோ
என் மனம் செய்ய போகும் சூழ்ச்சியை
தான் சுழற்சியால் சொல்ல வழி மொழிந்திருக்கிறது

உன் நினைவுகள்
அது எனக்கு உரித்தானது
என் உதிரத்தில் உருவானது

அழகான உறவு நமதென்று
கர்வமோடு வளம் வந்தேன்
அது கானல் நீராய் மாறப்போவது தெரியாமல்

நீயறியா என் அணு அசைந்ததில்லை
நினைவறியா உன்னை மறுத்து பேசியதில்லை

எண்ணி பார்க்க முடியல
ஏக்கம் இன்னும் கூட குறையல

உன்னை பார்க்கும் ஒவ்வொரு நாளும்
இன்றும் சிரிக்கிறேன்
என் மனதை உன்னிடமிருந்து மறைக்கிறேன்

நான் அறியேன்
உன் பாதை வேறென்று
அதில்
உன் விரல் கோர்க்க என் விழி எங்குமென்று

உன்னால்
தனிமை பிடிக்கிறது
தாகம் எடுக்க மறுக்கிறது
என்னையே மறந்தேன்
என் உலகமே நீயென்று இருந்தேன்

மறைக்க முடியல
என் மன வெறுப்போடு, உன்னோடு நடிக்கவும் முடியல

மனம் திறந்தேன் ....அதில் நீதான் நின்றாய்
விழி மூடி பார்த்தேன் ...அங்கும் நீயே வந்தாய்

உன் நினைவுகள் வந்து செல்ல செல்ல
நான் உயிருடன் கறக்கிறேன் மெல்ல மெல்ல

இருப்பினும் , உன்னடி சேரும் வரை
காத்துக்கொண்டிருப்பேன் என் உயிர் மூச்சு
உன் பெயர் சொல்ல சொல்ல ......???/

எழுதியவர் : பிரிசில்லா (12-Feb-17, 5:48 pm)
சேர்த்தது : Mariya
Tanglish : en thozhan
பார்வை : 157

மேலே