பூவிதழ் தேடும் பூ
தங்கமாய் மின்னும் தாரகை தேகம்
செங்கதிர் தேடும் சிவந்த வதனம்
முல்லைப் பற்கள் மூடிய தேனிதழ்
காற்றின் இசையில் கண்ணனைத் தேடுதே......
கருமுகில் கண்டு ஆடும் மயில்
கார்மேக வேந்தன் நினைவில் பாடுது
கானகத்தின் குயில்கள் எல்லாம் மயங்குது
வானமதைக் கேட்டு பூமாரி பொழியுதே......
தூங்காது விழிக்கும் தேவதை விழிகள்
மாங்கனியாய் இனித்திடும் கோதையின் மொழிகள்
இராகவன் மனதைத் தாலாட்ட துஞ்சுகிறானோ
அதனாலே வந்து சேர்ந்திட தாமதமோ.......
நெஞ்சில் மலர்ந்த காதல் பூவோ
மணம் வீசி மாயவனை அழைக்கின்றது
பேதை முகம் மலர்ந்து சிரித்தும்
வெள்ளம் போல் உளம் பாய்ந்தோடுகிறது......