வருவான் என்றெண்ணி ❤

உன் உதடுகள் உதிர்த்த வார்த்தையில்_ அவள் உள்ளம் நெகிழ்ந்ததேனோ ?
சிறுபிள்ளை போல சிரித்து_ உனை நெஞ்சில் விதைத்ததேனோ ?!

அவள் அங்க அழகை ஆராதித்து _ அக அழகை காண மறந்தாய்
கைசேரும் நாளை எண்ணி _ விஷவிதையை நெஞ்சில் விதைத்தாய்

அவள் சாலையை கடந்து சாதியை எரிந்து
உன் சொற்களை நம்பி நடக்க!
ஒற்றை ரோஜா மட்டும் அவள் கையில் உறுதுணையாக இருக்க!

நீ வருவாய் என்று கடலோர கப்பலில் காத்திருப்பவள் தானோ !!!
நீயோ_வேறொரு ரோஜாவின் மடியில்
கடல் மணலில் காதல் கடிதம் ஏனோ ?? ---

_கிறுக்கி

எழுதியவர் : KanmanI Srinvasan (14-Feb-17, 5:04 pm)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
பார்வை : 268

மேலே