காதலர் தின வாழ்த்துக்கள்
இந்நாள்,
இதழ்கள்
இளைப்பாறட்டும்,
இமைகள்
களைப்பாறட்டும்,
இதயங்கள்
இடம் மாறட்டும்..
இந்நாள்,
உடல்கள் தீண்டாது,
உணர்வுகள் தூண்டாது,
உள்ளங்கள்
உறவாடட்டும்...
இந்நாள்,
ஒருவர் மட்டும்
உருகும்
ஒருதலை காதலர்களுக்கும்,
உடலால் பிரிந்து,
உயிரால் கலந்த
உண்மை காதலர்களுக்கும்
காதலர் தின வாழ்த்துக்கள்..