அவள் அருகாமையில்

மலர்விழியாள் என் அருகில்! - நானோ
கொஞ்சம்கூட சலனமில்லாமல்.
சுடர்விடும் உணர்வுகள் இருந்தும்
சாதித்துவிட்டேன் கண்டுகொள்ளாதவன்போல்.

மழைக் காலம் போல
நெஞ்சங்கள் நனைந்தன!
சுற்றும் கருவிழிகளால் எனைச்
சாய்த்துவிட்டு அவள் சென்ற நேரம்...

மனத்தால் மறப்பேனோ? என்
நெஞ்சத்தைக் கொஞ்சம் கொஞ்சி
சுற்றிவிட்டுச் செல்லும் அவளின்
சாகாவரம்பெற்ற நினைவுகளை...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (14-Feb-17, 6:29 pm)
Tanglish : aval arukamayil
பார்வை : 211

மேலே