காதலின் இடையில் ஊடலா

கண் திறந்து எதிர்பார்கையிலே,
உன் நிழலும் வந்து சேரலையே...

விழிமூடி தவமிருக்கையிலே,
உன் சுவடும் இன்னும் தோன்றலையே...

வீடு தேடி சூரியனும் போகையிலே,
உன் வெளிச்சம் என்னை தொடலையே...

இரவு பணிக்காக சந்திரனும் வருகையிலே,
உன் கத்தி பார்வை இருளை கிழித்து
வரலையே...

கோபத்தின் உச்சியில் நடக்கையிலே,
உன் பிம்பம் என்னை தொடரலையே...

வெட்கங்கெட்ட கண்கள் மீண்டும் திரும்பி பார்கையிலே,
உன் வருகையின் அறிகுறியே புலப்படலையே...

தடுப்பு சுவர் உடைந்து நான் அழுகையிலே,
உன் தோள் சாய்க்கும் கரங்கள் இன்னும் காணலையே...

பொறுமையிழந்து அம்மியாய் நான் நகர்கையிலே,
திடீரென்று முந்தானை பிடித்து இழுத்தாயே...

இழுத்தது நீதான் என்ற ஆனந்தத்தில் நான் திரும்பையிலே,
ஆள் அரவமில்லா இடத்தில் ஏளன சிலிப்புடன் நின்றிருந்த தென்றல் என்னை கடக்கலையே...

தனிமையின் கொடுமையை ஏற்கமுடியாமல் பொத்தென நான் அமர்கையிலே,
பின்னிருந்து இரு கரங்கள் என் கண்களை பொற்றியது...

திறக்கவும், திரும்பவும் மனமில்லையே...
எங்கே இதுவும் என் கற்பனையின் கனவாகவே போய்விடுமோ என்ற பயத்தில்...

"நான் நனவானவன்" என்றபடி
உன் புரமாக திருப்பி
என் முகத்தை நீ கையில் ஏந்துகையிலே,

என் ஏமாற்றத்தின் நொடிகள் எல்லாம் இனிமையால் செதுக்கபட்டது அழகாக...

வார்த்தைகள் தேடி நான் அலைகையிலே,
"என்மீது கோபமா?" நீ கேட்ட ஒற்றை கேள்வியில் ஒட்டுமொத்தமாய் என்னை கரைத்து உன்னிலே கலந்திட நான் மறக்கலையே...

கோபமா? அது வருமா?
அதுவும் அவன் மீது?
அது சாத்தியமா?

அவனது கேள்விக்கான பதிலை
வேகமாய் மண்டையை ஆட்டினேன் 'இல்லை' என்று...

என்னை சமாதானபடுத்த வேலையில்லையே என்ற புன்னகையுடன் நீ சிரிக்கையிலே,
அந்த நொடியிலும் உன்னில் விழுந்து தொலைந்த என்னை
தேட விரும்பலையே...

துடைத்த என் கண்ணீரை நீ சேமிக்கையிலே,
உன்னையே அளந்தெடுத்த விழிகள் தடுமாறலையே...

தோளோடு தோள் சேர்த்து
உனக்கு ஏதுவாக என்னை வளைத்து
காதல் பார்வையால் ரசித்து
ஓரப்பார்வையால் மெல்ல வதைத்து
நம் காதல் தடயத்தை மண்ணில் புதைத்துவிட்டு
முன்னேறி நடக்கையிலே,

ஊடல் தற்கொலை செய்துகொண்டது...
காதல் மட்டும் எல்லை மீறியது...
நம்மிடம் ...

###விட்டு கொடுத்து சென்றால் மட்டுமே நீடிக்கும்
காதலின் ஆயுட்காலமும், காதலர்களின் எதிர்காலமும்###

@ஸ்ரீதேவி@

எழுதியவர் : ஸ்ரீதேவி (14-Feb-17, 6:38 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
பார்வை : 273

மேலே