ஜல்லிக்கட்டு போராட்டம்
அடையாளமாய்; திகழ்பவனை,
அழிக்க நினைக்கிறது ஒரு கூட்டம்:
வழி காட்டுபவர்களே, ஆள் காட்டிகளாய்;;
நம் இனத்தின்
ஆழம் தெரியாமல்:::
நமது பொறுமையை,
வெறுமையென நினைத்தவர்களை,
ஓரம்கட்டி...
உலகையே வியக்க வைத்தோம்:::
நமது தேசம் புகழ்பாடி,
நமது தேசம் நம் உயிர்நாடி யென,
சுவாசிக்கும், நம்...
மண்ணின் வாசனையை, மீட்டெடுக்கும்
ஓர் அமைதி புரட்சி:::
வந்தாரை வாழவைக்கும், நம்
திரு நாட்டின் கலாச்சாரத்தை,
காக்கத் துடிக்கும்,
கர்ஜிக்கும் காளைகள் நாம் ;;;;;;
ஒன்று படுவோம்!!! வென்று விடுவோம்!!!
நாளை நமதே,,,,,,