காதல் காதல்

உன் நினைவுகளை
என் உடலில் சுமந்தேன்
நிதானம் இல்லாமல்
நின்றேன்
நியூட்டன் விதி கண்டேன்
உன் பார்வையில்
நீ பார்த்த விசைக்கு
நான் எதிர் விசையாக காதல்
தந்தேன்
இதயம் துடி துடிக்க
உன் பெயர் பதிந்தன..

காதல் உன்னோடுதான்
என மனம் ஏங்கின
நான் ஏங்கி தவிக்கும்
வேளையில்
உன் பார்வை
என்னை தாங்கி 
சென்றன
நீ கடத்தி சென்றாய்
என்னை
உன் இதயத்தில்
தேடினேன் என்னை
உன்னிடத்தில்..

நான் எங்கே உன்
இடத்தில்
சொல்லிவிடு
என்னிடத்தில் நீதான்
சுவாசிக்கிறாய்...

இதயத்தில் இடம் கொடு
மறக்க முடியவில்லை
என் உயிரில் கலந்துவிட்டாய்
பிரிக்கமுடியாது
மறக்கமுடியாது உன்னை...

உன் பார்வையால்
மறைந்து போனேன்
மறந்து போனேன்
உன் அழகில் 
நான்
உறைந்துபோனேன்
உன் பார்வைகண்டு..

காத்துநின்றேன்
உயிர் காதல் சேர
ஏங்கிநின்றேன்
நீ காதல் சொல்ல
காலம் காலமாய்
காத்திருப்பேன் உனக்காக
காதல் காதல்
உன் மேல் காதல்...

எழுதியவர் : சிவசக்தி (15-Feb-17, 8:42 am)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : kaadhal kaadhal
பார்வை : 216

மேலே