தமிழனின் ஓலம்
அகிம்சையில் ஆரம்பித்து,
இம்சையில் முடிந்தது இந்த அறப்போராட்டம் ;;;
மற வம்சத்தை ஆததரித்தை,
நர மாமிச உண்ணிகள்.... களி ஆட்டத்தால் கலைத்தது ;;
இனியும் காவலர்கள்... என்றழைக்காதீர்,
இந்த சூனியக்காரர்களை.....
இனி
கல்லெறி விடாமல்,
நன்னெறியுடன் மதியுங்கள்.. நம் தெரு நாய்களை....
வாலட்டிக்கொண்டுக் காவல் நிற்கும்;;
நன்றியுடன் மட்டுமல்ல...
மனிதத்தை மதிக்கும் மனதுடன் !!!
உன் வயிற்றுப்பசிக்கு உணவளித்தோம்,
நண்பனாய் யாசித்து... ....... நீயோ...
அரசியல் வேசிகளுக்கு மாமாவானாய் ;;
நட்பினை மிதித்து....
காவல் துறையே, உன் அராஜகம்....
இழுக்கு என்றால் துடைத்து விடு
அழுக்கு என்றால் துவைத்து விடு
வழக்கு என்றால் விவாதித்து விடு
இல்லை என்று மட்டும் மழுப்பாதே...
உணர்ந்தால் தமிழனுக்கு நீ அழகர் ,!!!
இல்லையேல்,
உன் தொழிலுக்கும்.. குடும்பத்திற்கும்.. நீ சிறந்த தரகர்.........