என் தோழியைப் பற்றி

என் பேனாவின்
நூணிக்கு கூட
உன்னைத்தான்
பிடிக்கிறது ,
எப்படியெல்லாம்
பொய்
சொல்கிறது........

எழுதும் வரிகள் அனைத்தும்
பொய்தான்,
உனக்கு மட்டும்
மெய்தான்,
சிரித்துச்
சொல்லடி
பெண்ணே........

உன்முகம்
கண்டேன்
பேசாத
கிளியாய்,

பார்த்தேன்
ஒரு
தோழியாய்,

பேசினேன்
நண்பனாய்,

சொல்லிக்
கொடுத்தேன்
நன்மையாய்,

இப்படியெல்லாம்
நினைத்தேன்
கிறுக்கனாய்......


பாசமாய்
நீ
இருக்க,
பேசாமல்
நான்
எப்படி
இருக்க,

ஐயோ
இப்படியே
இருந்துகிட்டு
இருக்க.....

நான் எழுதும்
கவிதைகளின்
வடிவமைப்பு,
உன் முகத்தின்
உருவமைப்பு......

உலகத்தில்
மிகச்
சிறந்த
படைப்பு,

உன்னோட
சிரிப்பு,

இதைச்
சொல்றேன்
பாரு,

நான் உனக்கு
எவ்வளவு
சிறப்பு.........

உயிரை போனாலும்
உயிராய் இருப்பாய்,
நான் தொலைந்தே
போனாலும்
என் தோழியாய்த்தான்
இருப்பாய்.....

காதல்
வருவதற்கு
ஒருகாலம்
உண்டு,

நட்பு
வருவதற்கு
எல்லா
காலமும்
உண்டு,
இதற்கு
பதில்
உன்னிடத்தில்தான்
உண்டு........


பார்த்தால்
அஹிம்சையாய்,
பேசினால்தான்
பெரும்
இம்சையாய்....

இம் மண்ணில்
நான் கண்டதில்
பிடித்தது,
உன்னை
நான்
கண்டது......

உனது கண்ணில் வரும்
கண்ணீரை
பிடித்து வைத்திருந்தால்,
இந்நேரம் - நிரம்பி
வழிந்திருக்கும்
தாமிரபரணி
ஆறும்...... .

பெண்
சிங்கத்தின்
வீரத்தை,
ஒரு பெண்ணிற்குள்
கண்டேன்,
நீ
என்னோட
சண்டையிட்டு
வெற்றிப்பெற்ற
போது....

நீ அழும்போதெல்லாம்
என்னை கழட்டினாள்,
நான் எப்படி
அழுவேன்

=இப்படிக்கு
உன் கண்ணாடி(specs)....

கார்கில் போர் வரப்
போகுதாம்,
உன்
கண்ணாடிக்கும்
உன்
lensirkum,
யாரை
நீ வைத்துக் கொள்வது
என்று.....

இதயமே எண்ணில்
இல்லாத போது
உயிராய் துடி துடிப்பாய்,
இப்போது எப்படி
மறப்பேன்
எண்ணில் இதயமே
உள்ள போது.....

தனிமையை அதிகம்
கையாண்டவள்,
என்னிடத்தில் காதலியே

தனிமையை அதிகமாய்
வெறுத்தவள்,
என்னிடத்தில் தோழியே....


கேட்கிறேன்
நிரந்தர சட்டம்
கேட்கிறேன்,

வேணாம்
அவசரத் சட்டம்
வேணாம்,
நம்
நட்பிற்கு........

தினசரி
செய்தித் தாள்தான்
உன் நினைவு,

தினசரி
வீட்டுப் பாடம்தான்
உன் கனவு...........

திருக்குறள்தான்
நாம்,
அதன் மொழி
பெயர்ப்போ
நம் நட்பு.......

முத்தாய் சிரிக்கும்
உன்னைப்பார்த்து,
ஜொலிக்கும் வைரக்கல்லும்,
பொறாமை கொள்ளும்
ஒருநாள்.......

ஆகாயத்தில் நீர்
இருந்தால்தான்
இம்மண்ணில்
மழையாமே,
இல்லை
இல்லை,

பூமியில்
நீ

கோவப்பட்டாலே
மழைதானே.......

நாட்டில் எப்போது
வேண்டுமானாலும்
மாறும் ஆட்சி,

மனதில் செத்தாலும்
மாறாத,
உன் சூழ்ச்சி
(நட்பு)......


உளியை கொண்டு
செதிக்கினேன்,
எதோ ஒருநினைவை,
உருவமாய் வந்தது
என்னமோ
உன் முகம்தானே.....

இருபதாம்
நூற்றாண்டுபோய்,
இருநூறு
நூற்றாண்டு
வந்தாலும்,
மனதில் அழியாமல்
இருக்கும்,
அழகியே
கவிதைதான்
நீ...........

காலம் எல்லாம்
நீ பொய் சொன்னாலும்,
காதை கொண்டு கேட்க
நான் இருக்கிறேன்,
சிரிக்காதே😂😂

நானே
இப்பொழுது
பொய்தானே
சொன்னேன்..........

இவ்வளவு எழுதியும்
போதாது,
இதைப் படி
இப்போது,
விடைபெறுகிறேன்
தற்போது,
நட்புக்கு பிரிவே
கிடையாது.....

by
j.munafar....

எழுதியவர் : munafar (15-Feb-17, 6:50 pm)
சேர்த்தது : முனோபர் உசேன்
பார்வை : 657

மேலே