கல்லூரி நாட்கள்

கற்பனைக்கு எட்டாததும் கவிதைக்குள் அடங்காததும் தான் கல்லூரிநாட்கள் !!

கவிஞ்சர்களால் வர்ணிக்க முடியாததும்!
கைவினை கலைஞ்சரானாலும் செதுக்க முடியாதது தான்
கல்லூரி நாட்கள் !

கடந்து செல்ல நெடுஞ்சாலையும் அல்ல!
கரையை கடக்க காட்டாறும் அல்ல!
கண்களை மூடினாலும் கனவுகளோடு தொடர்வதுதான் கல்லூரி நாட்கள் !

காணுமிடமெல்லாம் நண்பர்கள் கூட்டம்!
பூக்களாய் பூத்திருந்தது கல்லூரி தோட்டம்!
சேர்ந்து போடாத ஆட்டமும் இல்லை!

தோல்வி என்றால் வாட்டம் இல்லை!

இன்பத்தை கொடுத்து துன்பத்தை எடுத்தது கல்லூரி நாட்கள்!

முதுமை அடைந்தாலும் பசுமை நினைவுகளோடு பறக்கும் புறாக்கள் தான் கல்லூரி நாட்கள்!
ஏ.தமிழ் செல்வன்

எழுதியவர் : ஏ.தமிழ் செல்வன்.. (13-Feb-17, 8:29 pm)
சேர்த்தது : தமிழ் செல்வன்
Tanglish : kalluuri nadkal
பார்வை : 360

மேலே