புது உறவு

தோழியே,

உன் உறவுகளை உதறிவிட்டு.
எனை நம்பி வந்தாய், என்னவளாய், எனக்காக!

காதலியே,

இனிமைகளால் இழைத்த இன்ப ஊற்றாய் இருந்தாய், நிலவில் வழியும் தேனாக!

மனைவியே,

உறவுகளையும், உணர்வுகளையும் ஊட்ட
ஒரு புது உறவாய் வந்தாய், உயர்மிகு உள்ளத்தோடு!

செல்லமே,

அன்பால் சொக்க வைத்த உனக்கு,
நான் சொர்க்கத்தையும் உருவாக்குவேன்!

அங்கே தங்கப்பூக்கள் பூத்து நம்மை வரவேற்கும்,
நம் புதுமண பந்தத்திற்காக!!

எழுதியவர் : இஸ்மாயில் (15-Feb-17, 9:11 pm)
சேர்த்தது : அகரன்
Tanglish : puthu uravu
பார்வை : 1202

மேலே