விடியல்களை நோக்கி ---- மரபு கவிதை
பாரதிதாசன் சான்றிதழ் போட்டியாளர் - 10
பெண்களையும் அடிமையாக்கிப்
------ பேசாமல் செய்கின்றக்
கண்ணில்லாக் குருடர்கள்
------ காலந்தான் நடக்குதிங்கே !
பெண்டிரையும் பூட்டிவைத்துப்
------ பெருமைதனை மாற்றுகின்ற
எண்ணிலாக் கொடுமைகளை
------- எத்தருமே செய்கின்றார் !!!
வண்ணமிகு நல்லறத்தை
------ வளமாக்கி வைக்கின்ற
உண்ணுசுவை மிக்குடைய
------ ஊன்றுகோலாம் பெண்ணினமே !
மண்ணுலகம் உள்ளவரை
------ மடந்தையரைப் பேணுங்கள் !
விண்ணுலகும் பறைசாற்றும்
------- விடியலுமே வேண்டுமென்றே !!!
விடியலினை நோக்கியதோர்
------ விந்தையானப் பயணங்கள்
மிடிகளுமே களைந்திடவே
------ மின்னிடுவர் பெண்ணினமே !
இடிதாங்கும் இதயத்தை
------- இயல்பாகப் பெற்றவராம் .
மடியவேண்டாம் எந்நாளும்
------- மங்கையரும் வாழவேண்டும் !!!!
மறைபொருளாய் மறைத்துவைக்க
-------- மாதரரும் பணமில்லை !
திரைமறைவில் கைதியாகித்
------- திண்டாடும் நெஞ்சமோடு .
வரையறைகள் யார்வகுத்தார் !!
------- வாடிடுமே நல்வாழ்வும் .
முறையான நீதிதனை
------- முத்தாய்ப்பாய் வைத்திடுங்கள் !!!!
நீதிவேண்டும் சமூகத்தில்
------ நிம்மதியும் தந்திடுங்கள்
பாதிஉயிர் போனபின்னே
------ பங்கிடவும் வேண்டாமே !
ஒதிடுங்கள் விடியலுக்கு
------ ஒர்ந்திடுவீர் வாழ்வுநெறி !
சாதிப்பார் பெண்களுமே
------ சாதனைகள் பெருகட்டும் !!!!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்