என் தெரு
என் தெருவில்
நீங்களும் அவரை காணலாம்...???!!!
விறைத்து சல்யூட் செய்யும் நழிந்த தேகம்....
உயிர் இல்லாத கண்கள்!
ஒடுங்கிய முகம்!
மனம் சரியில்லை என குடிக்க பழகி
அதனாலேயே
மனநிலை சரியில்லாத ஜீவாத்மா அவர்!.....!!!!
அவரை கடக்கும் வாகன ஒட்டிகளின்
நல்ல -கெட்ட காலங்களை ...........அவரே தீர்மானிக்கிறார்!
திடிரென்று வாகனத்தின் மீது பாய்ந்தோ,
கத்தியோ -----
அவரின் வருகை பதிவு செய்யப்படும்!
மனைவி, மகள்களின் ---
அழையாவிருந்தாளி அவர்...!!!????
தன்னை தான் திட்டி கொண்டோ..
அல்லது சிரித்துக்கொண்டோ..
தினம் தினம் வீதி உலா வருவார்!
நீங்கள் என் தெருவில் வந்தால்
வரவேற்க நிச்சயம் அவர் நிற்கக்கூடும்!!!