அன்பு , அழகு

அன்பு!
கண்ணுக்கு தெரியாதவற்றை பார்க்க நுண்ணோக்கி
தூரத்தில் இருப்பதை பார்க்க தொலைநோக்கி
தாயின் மனதை பார்க்க அன்பு

*********
அழகு!
வானவில்லுக்கு வண்ணங்கள்
அவளுக்கு கன்னங்கள்
அழகு!

*********

பெருசும் சிறுசும்!
பெருசுங்க பொலம்புறாங்க
சிறுசுங்க அலுத்துக்கிறாங்க
இப்படித்தான் போகுதடா சமூகம்
இது எங்க போயி முடியும்?

*********

காதல் கிறுக்கு!
எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை,
நானும் ஒரு கவிதை எழுத வேண்டுமென்று!
அவள் பார்வை தான் என்மேல் பட்டது,
ஓராயிரம் கவிதைகள் பிறந்தது!
காதல் கிறுக்கு வந்தால்
கவிதை கிறுக்கு வருமோ?

*********

பொறுப்பு!
இவனுக்கு என்னைக்குத்தான்
பொறுப்பு வருமோ?
இது அம்மா!
பொறுப்புன்னா என்ன?
என்பான் உன் பிள்ளை
இது அப்பா!
என்னை மட்டும் அடிச்சி
வளத்தீங்க அவனை
கொஞ்சுநீங்கள்ள, அதுதான்!
இது அக்கா!
இன்னைக்கு இருக்கிற இளைஞர்களுக்கே
வேகம் உள்ள அளவுக்கு
விவேகம் இருக்கிறது இல்லை!
இது தாத்தா!
நீங்கெல்லாம் கிழிச்சதை விட
என் பேரன் ரொம்ப கிழிப்பான்
வாயை மூடுங்க!
இது பாட்டி!
பிள்ளைன்னு இருந்தா,
கோடி வீட்டு பிள்ளையாட்டம் இருக்கணும்!
நமக்கும் வாச்சதுங்களே,
தின்னுகெடுக்க!
இது அக்கம் பக்கம்
குடியரசு தின விழா!
வீரதீர செயல் புரிந்ததிற்காக
‘விருது’!
கிணற்றில் தற்கொலை செய்வதற்காக குதித்த
தாயையும் மூன்று சிறுமிகளையும்
நீச்சல் தெரியாது கார்டயரை
வயிற்றில் கட்டி கொண்டு கிணற்றில் குதித்து
காப்பாற்றியதற்காக!
இது அரசு!

*********

புலம்பல்!
இன்றைக்கு பயல்களிடம் புத்தகம் படிப்பதே
குறைஞ்சு போச்சி,
கணிணியும் கையுமாக இருந்து
கண்களை தொலைத்து கொள்கிறார்கள்,
பெருசுகள்!
நாங்க கண்ணுகள தொலைச்சதனால்தான்
நீங்க டீவி சீரியல்களுக்கு
கண்ணீர் சிந்த முடியுது!
சிறுசுகள்!

*********

முத்தமழை!
அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்
அவர்களது ஹார்ட்டில் அடைமழை பொழிகிறது!

*********

வேறுபாடு!
அம்மா என்றால் தெய்வம்
என்னோட அம்மாவா?
உன்னோட அம்மாவா?
அவனும்-அவளும்!

*********

அம்மாவும்-பிள்ளையும்!
பெத்தவள் மனதில் பிள்ளை ஏக்கத்தோடு
முதியோர் காப்பகத்தில்
பிள்ளை மனதை கல்லாக்கி காரியத்தில்
மும்மரமாய் வெளிநாட்டில்!

*********

நிலவு!
அன்பே இரவு நேரத்தில் வெளியே போகாதே
நட்ச்சத்திரங்கள் நிலவிடம் பந்தயம் கட்டிஇருக்காம்
நிலவை விட நீதான் அழகி என்று
பாவம் பிழைத்து போகட்டும் நிலவு!

*********

சிறப்பு!
சல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர்
நடைபெற்றது மகிழ்ச்சி
போராட்டத்தில் சாதிக்கட்டு முறிந்ததே
இது என்ன சிறப்பா?

*********

வாழ்க்கை!
வாழ்க்கை ஒரு ரூட்டு
உடம்பு ஒரு பஸ்சு
மனசு ஒரு டிரைவரு
எண்ணம்தான் ஒரு பெட்ரோலு
சிந்தனைதான் பிரேக்கு
பிரேக்கு போடு பேக்கு
.
*********

கைரேகை!
சிலருக்கு கங்கையைபோல்
பலருக்கு கவேரியைபோல்
அன்பே நி மட்டும் சரி என்று சொல்
மூன்றே முடிச்சில் கங்கையையும் காவிரியையும்
இணைத்துவிடுகிறேன்
கைரேகையில்!

*********

அன்றும் இன்றும்!
அன்று...
ஆஃபீசில் ஓவர்டைம் என்பார் அப்பா
எவளோடு என்பாள் அம்மா
மூழும் சண்டை பிள்ளைகள் எதிரில்
இன்று...
டே ஸிப்ட் ஒருவாரம் அவளுக்கு
நைட் ஸிப்ட் ஒருவாரம் எனக்கு
ஆனால் சண்டையே இல்லை! பிள்ளைகளும் இல்லை!

*********

சதி!
அன்பே நம் காதல் சென்னையின்
பழைய மரங்கள் போல் வலிமையாய் இருக்கும் என்றோம்
வர்தா புயலடிக்க பழைய மரங்கள் முறிந்தது
இது விதி
சாதி புயலடிக்க நம் காதல் முறிந்தது
இது சதி!

*********

அன்றும்-இன்றும்!
அன்று...
அம்மியும் இருந்தது கும்மியும் இருந்தது
ஆட்டுகல்லும் இருந்தது துவைக்கிற கல்லும் இருந்தது
மனிதர்களுக்கு காலும் கையும் நன்றாக இருந்தது
இன்று அம்மியும் இல்லை கும்மியும் இல்லை
ஆட்டுக்கல்லும் இல்லை துவைக்கிற கல்லும் இல்லை
மனிதர்களுக்கு காலும் கையும் நன்றாகவும் இல்லை!

*********

மெரினா!
நேற்று வரை காற்றுக்காக, இன்று மாட்டுக்காக!

*********

மெழுகுவர்த்தி!
ஏற்றுவதுக்கு முன் தந்தையின் மனம்
ஏற்றியபின் தாயின் மனம்

*********

சிபாரிசு!
உண்மைக்கு ரத்தசோகை பிடித்துள்ளது
இரும்பு சத்து மாத்திரை கொடுங்களேன்!

*********

அகங்காரம்!
மனதில் வாழும் எச்ஐவி!

*********

மனிதன்!
நன்றாக வாழும் போது பணத்தின் பக்கம்
வாழ்ந்து கெட்ட பிறகு குணத்தின் பக்கம்!

*********

பணிவு!
மனமெனும் ஆற்றின்
கரையோரம் முளைத்த நாணல்!

*********

அவள்!
நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து
பொன்னங்கன்னி கீரை சாப்பிட்டால்
பகலில் கூட நட்சத்திரத்தை பார்க்கலாம்
என்றார் அம்மா
நானும் அவ்வாறே செய்தபின்
பார்த்தேன் நட்சத்திரத்தை பகலில் பிரகாசமுடன்
வானில்அல்ல, எதிர்வீட்டு வாசலில்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (18-Feb-17, 2:10 pm)
Tanglish : haikku kavidaigal
பார்வை : 5790

மேலே