மாற்றம் வேண்டும்
வந்தோம் வளர்ந்தோம்
கனவோடு
வாழ்ந்தோம் மடிந்தோம்
நெருங்கியவர்
நெஞ்சில் நின்றோம்
ஏனையோர்
நினைவில் மட்டுமே
இதில்
தானென்று தனக்கென்று
சேகரித்த
பேரென்ன புகழ் என்ன
கூடுவிட்டு
போகும் போது துணை
நானென்று
கூட வருவதில்லை
சித்தர் பாடினாலும்
புத்தர் ஓதினாலும்
மனிதா
நீ மட்டும் நீயே
மாற்றங்களே மாறிவிடும்
மாற்றமில்லை
உனக்கு மட்டும்