சிந்திக்காத வரை யாவும் மூடநம்பிக்கையே

நயவஞ்சகத்தால் நிறைந்த புத்தியுள்ள குள்ளநரி கூட்டமடா...
அங்கு ஆளாளுக்கு நட்டாமையடா....

பொதுவுடைமைக் கொள்கையென்றே தன்னுடைமைக் கொள்கையே செயலாக்கும் மக்களாட்சியொரு போலி வேடமடா...
புரியாத இரகசியங்களைக் காக்கத் தான் செய்கிறார்களே இரகசியக் காப்புப் பிரமாணமடா....

கொள்ளையடித்தவர்கள் யார், யாரெனத் தெரிந்தும் சட்டம் கொண்டு தண்டிக்காமல் திட்டமிட்டு பிடிப்பதைப் போல நடித்து மக்களை ஏமாற்றும் அரசியலடா....
அதற்காகவே கட்சிகளடா....

கொள்ளைக்காரனொருவன் பிடிபட்டால் அவனை ஜாமீனில் எடுப்பதற்காகவே, கருப்பு அங்கியணிந்த கூட்டமே இருக்குதடா....
காவல் காக்கும் காக்கிச் சட்டைகளோ, கொள்ளைக்காரர்களுக்கே ஜால்ரா தட்டுதடா....

கொள்ளைக்காரனை சட்டத்தில் இருந்து காப்பாற்றவே, போலி மருத்துவ அறிக்கைகள் கொடுக்கும் மருத்துவர்களே அதிகமடா.....
இவையாவற்றையும் தீர்மானிப்பதோ, மடியிலுள்ள பணமடா....
பணத்திற்காக
கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே...
சற்றே சிந்தியுங்களே.....
மாணவர்களைச் சிந்திக்கத் தூண்டுங்களே....
புத்தகங்கள், குறிப்பேடு யாவற்றையும் சற்றே விலக்கி வைத்துவிட்டு,
சிந்திக்கத் தூண்டுங்களே....
சிந்திக்காத வரை யாவும் மூடநம்பிக்கைகளே....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (18-Feb-17, 5:06 pm)
பார்வை : 2073

மேலே