வீரமும், தன்மானமும்
பகைமை கொண்டதாலே சமர்க்களத்தில் கூர்வேள் கொண்டு குத்திச் சமர் செய்தே
தனது பகையொழித்து
ஆனந்தம் பெற்றனர் முன்னொரு காலத்திலே....
பகைமை கொண்டே சூழ்ச்சி செய்து மறைந்து இருந்தே
துப்பாக்கி கொண்டு
கொழையைப் போல் சுட்டு வீழ்த்தி, தனது பகையொழித்து ஆனந்தம் பெறுகின்றனர் இன்றைய காலத்திலே....
நெஞ்சில் குத்திய கூர்வேள் பின் முதுகு துளைத்தே புண்ணாக்கியதால் அதன் தழும்பைக் காண்போர் தன்னை புறமுதுகிட்டோனென்று கூறுவாரே என்று அஞ்சியதாலே வடக்கிருந்து உயிர் துறந்தனர் முன்னொரு காலத்திலே.....
நெஞ்சில் மோதி வெல்ல முடியாதென்று அஞ்சி ஓடி மறைந்து சூழ்ச்சி செய்தே தன்மானமில்லாது
முதுகில் குத்தி வீழ்த்துகின்றனர் இன்றைய காலத்திலே....
வீரம், தன்மானமென்றெல்லாம் பேசுகிறீர்களே...
உங்களிடம் உண்மையில் வீரமும், தன்மானமும் குடிகொண்டிக்கின்றனவா???...
ஒழுக்கத்தை கடைபிடிப்பவர் தன்மானத்தோடு வாழ்வாரே...
ஒழுக்கத்தை இழந்தவரெவரும் தன்மானத்தைப் பற்றிப் பேசும் அருகதையற்றவரே....
உங்களிடம் வீரமென்று ஒன்றிருந்தால் அதை ஆக்கப்பூர்மாகப் பயன்படுத்துங்கள்...
நிகழும் தவறுகளை தடுங்கள்....
களத்திறங்கி வேலை செய்யுங்கள்....
இயற்கையைப் பேணிக் காப்பாற்றுங்கள்.....