கிராமத்தின் உயிரோசை - கிராமியப் பாடல்

மாட்டுவண்டி ஓட்டிகிட்டு
மாமனவன் வருகையில
நாட்டு நடப்போன நானும்
நலந்தேடி வந்தேனே !


வெள்ளாம நெல்லை எல்லாம்
வகையாத் தான் மூட்டையுமே
கட்டிக்கிட்டு இரட்டை மாட்டு
வண்டியில மாமன் வரும்
அழகையுமே ஓரக்கண்ணால்
பாத்துடுவேன் ! உலகமே
நீதான்னு எம்மனசு சொல்லிடுமே !


அள்ளி வைச்சக்
கூந்தலில பிச்சிப் பூ
வைச்சுக் கிட்டு காத்திருப்பேன் .
கிட்ட வந்து தொட்டு
நீயும் அன்போட அணைச்சுக்குவ !


வளர்த்த நாயும் வெயிலவர
வரிசையில வண்டி வர
வானம் பாத்தா பூமி மச்சான்
நம்ம பூமி ! வாய்க்காலும் வயலும்
தானே நம்ம சாமி !


வாசலில கோலம் போட்டுப்
பூசணிப் பூ மையத்துல
வெக்கையில வயல் வெளிக்குச்
சென்ற மாமன் வேர்த்து வடிஞ்ச
முகத்தோட நிக்கையில
என் முந்தானையை எடுத்து நானும்
முகத்தையுந்தான் தொடச்சும் விட
ஒன்னாவோம் மனசால !
ஒண்டிக்குவோம் குடிசையில !
இது தானே கிராமத்து உயிரோசை !


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (19-Feb-17, 6:30 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 106

மேலே