எனக்காக காத்திருக்கும் அவள் 555
அன்பே...
என்னால் எதையும்
தாங்கிக்கொள்ள முடியும்...
உன் மனதில் உள்ளதை
இரண்டில் ஒன்று சொல்லிவிடு...
நித்தம் எனக்காக
காத்திருக்கிறாள் ஒருத்தி...
உன் முடிவை
சொல்லிவிடு எனக்கு...
முதல்முறை எனக்குள்
உன்னைத்தான் நினைத்தேன்...
என்னையும் இவள்
நினைத்துக்கொண்டு இருக்கிறாள்...
ஊருக்கு வெளியே
எனக்காக காத்திருக்கிறாள்...
உனக்காக நான் என்னில்
காதல் கோட்டை கட்டினேன்...
அவளோ எனக்காக
கற்களால் அறைகட்டுகிறாள்...
என்னோடு நீ இருந்தால்
காதல் கோட்டையில் வாழ்வு...
நீ இல்லை என்றால்
கல்லறையோடு என் வாழ்வு.....