பயனில்லாத கண்கள்

அவள் முன்னே வரும்போது
பார்க்கத் துணிவில்லாமல் தவறவிட்டுவிட்டு
என் பின்னே இருக்கும்போது
வேண்டினேன் தெய்வத்திடம்
" எனக்கு பின்னாலும் கண்களைக்கொடு...
அது யாரும் அறியாவகையில் வைத்துக்கொடு..." என்று.
தெய்வத்தின் பதிலாய்க் கேட்டது
"அவளைப் பார்க்கத் தவிர்த்த போதே
இருந்தும் பயனில்லாத குருட்டுக்
கண்களைப் பிடுங்கி இருக்க வேண்டும்" என்று.
என்று பிடுங்குவான் என்று
அவள் நினைவுடன் காத்திருக்கும் நான்...