காதல்- பெண்ணின் இரக்கம் நாடி அலையும் காதலன்
கரையில்லா கடலோ
நதியோ இல்லை
இரக்கமில்லா பெண்ணும் இல்லை
பெண்ணே உன் பார்வையில்
என்னை வைத்தேன்
உன்னை என் மனதில் வைத்தேன்
உன்னையே சுற்றி சுற்றி
வந்தும் உன் பார்வை
இன்னும் என் மீது
விழாததேனோ நான் அறியேன்
பூவை நாடி வரும் வண்டிற்கு
பூவே வாசம் தரவில்லை என்றால்
வண்டு எங்கு போகும் தேனிற்கு
(வாசம்: இருப்பிடம்)
நான் வண்டுதான் என்றும்
நீயேதான் நான் நாடிவரும் பூ
உன்னில் பாதியாய் ஆகிவிட
விரும்பும் ஆண் வண்டு நான்
மனம் இறங்கிடுவாய்ப் பெண்ணே
என் பார்வைக்கும் மதிப்பு தந்திடுவாய்
பாரா உன் முகம்
பார்க்குமுகமாய் என்று மாறிடுமோ
நம் பார்வையை மாற்றிவிடுமோ
காதலாய் மாற்றிவிடுமோ
அந்நன்னாளே நம் உறவுக்கு
முகஉரையாய் மாறிவிட
காத்திருப்பேன் கண்கள்
உறங்காமல்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
